அந்த மனுவில், தாராபுரம் பூக்கடை கார்னர் அருகே உள்ள என்.என்.பேட்டை வீதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையால் அப்பகுதி பொதுமக்கள், பெண்கள், மாணவர்கள் மற்றும் வியாபாரிகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மதுபானம் அருந்திவிட்டு சிலர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதால் பெண்கள் மற்றும் மாணவர்கள் அச்சத்துடன் செல்லும் சூழல் நிலவி வருவதாகவும், சமூக அமைதி பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்த போதிலும், இதுவரை எந்த அரசும் அந்த கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு தீர்வு காணும் வகையில், மேற்படி டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்றி வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் விக்னேஷ் அவர்களிடம் ஜாபர் சாதிக் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி இந்த டாஸ்மாக் கடையை அகற்றித் தந்தால், தாராபுரம் மக்களிடையே அரசின் மீதான நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும், வரவிருக்கும் தாராபுரம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்கு இது கூடுதல் ஆதரவாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment