சமூக ஆர்வலர் ஜாபர் சாதிக் வெளியிட்ட வீடியோ எதிரொலி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையம் எதிரில் உள்ள மேம்பாலத்தின் கீழ் ராட்சத தேன்கூடு ஒன்று அமைந்திருந்தது. இதனால் அப்பகுதியில் தினமும் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்து வந்தனர்.
இந்நிலையில், சமூக ஆர்வலர் ஜாபர் சாதிக் கடந்த 22.05.2026 அன்று அந்த தேன்கூடு குறித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்திருந்தார்.
அதன் எதிரொலியாக, தாராபுரம் தீயணைப்புத் துறையினர், தாராபுரம் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்மன்றத் தலைவர் பாப்பு கண்ணன் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இன்று மேம்பாலத்தின் கீழ் இருந்த ராட்சத தேன்கூடு பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டது.
தேன்கூடு அகற்றப்பட்டதன் மூலம் அப்பகுதியில் நிலவி வந்த அச்சம் நீங்கியுள்ளதுடன், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொதுமக்களின் நலன் கருதி பிரச்சினையை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த சமூக ஆர்வலர்
ஜாபர்சாதிக்கிற்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
No comments:
Post a Comment