தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவி ஏற்பு: தாராபுரத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 May 2026

தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவி ஏற்பு: தாராபுரத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்


தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்றதை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கட்சி தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


தாராபுரம் பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் நகர தலைவர் ஜாபர் சாதிக் தலைமை தாங்கினார். இதில் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சி கொண்டாடப்பட்டதுடன், பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.


நிகழ்வில் தொண்டரணி அமைப்பாளர் தாமு, முன்னாள் நகர துணைத் தலைவர் ஜுபைர் பாஷா, 6-வது வார்டை சேர்ந்த முஜிப் ரகுமான், தஸ்லிம், ஜஹாங்கீர், ராயல் ஜாபர், வீராச்சிமங்கலம் கார்த்தி, நாச்சிமுத்து, தென்தாரைப் பகுதியை சேர்ந்த சுபாஷ், ராம்நகர் தமிழ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad