திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு போக்குவரத்து பணிமனை மேலாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள கோபாலகிருஷ்ணனை, தமிழக வெற்றிக் கழக தாராபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கெளரி சித்ரா தலைமையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது, பணிமனையில் தமிழக முதல்வரின் புகைப்படத்தை விரைவில் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் விஜய் மக்கள் இயக்கம் முன்னாள் நகர தலைவர் ஜாபர் சாதிக், வாக்குச்சாவடி அணி மாவட்ட அமைப்பாளர் சுஜித் குமார், ஹரி பிரசன்னா, மாவட்ட பொறுப்பாளர் நாகேந்திரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment