தாராபுரத்தில் ஆதரவற்ற முதியோர்களை காப்பகத்தில் சேர்த்த காவல்துறையினர் பொதுமக்கள் பாராட்டு - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 May 2026

தாராபுரத்தில் ஆதரவற்ற முதியோர்களை காப்பகத்தில் சேர்த்த காவல்துறையினர் பொதுமக்கள் பாராட்டு



தாராபுரம் பகுதியில் ஆதரவற்ற முதியோர்களை பாதுகாக்கும் நோக்கில் மனிதநேய செயல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தாராபுரம் காவல் துறை கண்காணிப்பாளர் சிவகுமார் மற்றும் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில், ஹெல்பிங் ஹார்ட்ஸ் நிறுவனத்தின் ஹரி பிரசாத் மேற்பார்வையில் இந்த மீட்பு நடவடிக்கை நடைபெற்றது.


இந்நிகழ்வில் தாராபுரம் அப்துல் கலாம் அறக்கட்டளை தலைவர் அபுதாகிர், சமூக ஆர்வலர் ஜாபர் சாதிக், பத்திரிக்கையாளர்கள் நூர் முகமது,மற்றும் அக்கீம்,உள்ளிட்டோர் இணைந்து, தாராபுரம் நகரின் சாலையோரங்களிலும் தெருக்களிலும் ஆதரவின்றி தவித்துக் கொண்டிருந்த முதியோர்களை மீட்டனர்.


மீட்கப்பட்ட முதியோர்கள் பாதுகாப்பாக கோயம்புத்தூரில் உள்ள ஹெல்பிங் ஹார்ட்ஸ் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவம் மற்றும் தங்கும் வசதிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


ஆதரவற்றோரின் நலனை கருத்தில் கொண்டு காவல்துறையினரும் சமூக ஆர்வலர்களும் இணைந்து மேற்கொண்ட இந்த மனிதநேய சேவையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். மேலும், இதுபோன்ற சேவைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் சமூக நல ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad