திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் மேயர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர்
ந. தினேஷ்குமார் அவர்கள் வாக்காளர்களுக்கும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளுக்கும் திமுக உடன் பிறப்புகளுக்கும் நன்றி தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி மற்றும் திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பூர் வடக்கு, அவிநாசி தொகுதியின் கழக வெற்றிக்காக பாடுப்பட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர,பேரூர் கழக நிர்வாகிகள்,சார்பு அணி நிர்வாகிகள்,கிளை,வார்டு கழக செயலாளர்கள்,BLA2,BLC,கழக முன்னோடிகள், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகள்,செயல்வீரர்கள் மற்றும் தொண்டர்கள்
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும்,கழகத் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள், கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் என்மீதும் நம்பிக்கை வைத்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும், திருப்பூர் தெற்கு தொகுதி வாழ் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி🙏🏻
தமிழ்நாட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத அளவிற்கான சாதனைத் திட்டங்களைத் தந்துள்ள எங்கள் அரசியல் ஆசான் கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் வழியில், உங்கள் தேவைகளை அறிந்து செயல்படும் வகையில், எனது பயணம் தொய்வில்லாமல் தொடரும். இவ்வாறு கூறினார்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment