திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் பயன்பாடு குறித்து, நகராட்சி அதிகாரிகள் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டனர்.பல்வேறு கடைகளில் நடந்த சோதனையில், 55 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர் மற்றும் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. இனி விதிமீறி மீண்டும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால்அபராதம் விதித்து, கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். இப்படி எச்சரிக்கை விடுவதை விட உடனடியாக குறைந்தபட்ச அபராதம் விதித்தால் மட்டுமே அவர்கள் மீண்டும் விற்பனை செய்ய மாட்டார்கள் அது இல்லாமல் இவர்கள் எந்த கடையில் மொத்தமாக வாங்குகிறார்கள் என்ற ஆய்வை நடத்தி அந்த மொத்த விற்பனை கடை மற்றும் நபர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதித்தால் மட்டுமே விற்பனையை நிறுத்துவார்கள் அதிகாரிகள் செய்வார்களா சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது
மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment