அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை மாணவர்கள் தேர்ச்சி கேள்விக்குறி லஞ்ச ஒழிப்பு பாசறை நிர்வாகிகள் மனு - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 11 June 2026

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை மாணவர்கள் தேர்ச்சி கேள்விக்குறி லஞ்ச ஒழிப்பு பாசறை நிர்வாகிகள் மனு


திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நாரணவரே மனிஷ் 

ஷங்கர் ராவ் இ.ஆ.ப., அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு பாசறை ஆதரவு இயக்கம் சார்பாக அதன் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது அரசு பள்ளிகளில் அரசு ஒதுக்கியுள்ள ஆசிரியர்களை விட குறைவான ஆசிரியர்களே பணிபுரிந்ததால் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படுகிறது என்றும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் மற்றும் இதனால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களே பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலமாக குறைந்த அளவு கட்டணத்தை வசூலித்து வங்கி கணக்கில் வரவு வைத்து மாத மாதம் தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளமாக கொடுத்து வந்தனர் இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் இந்த சூழ்நிலையில் இதை தொடர்வதும் மிகவும் சிரமமாக உள்ளது எனவே மாவட்ட நிர்வாகமும் கல்வித்துறையும் மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கியோ அல்லது போதுமான அளவிற்கு ஆசிரியர்களை நியமிக்க ஆவண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும் பொழுது மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைந்து விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது இது தொடர்பாக ஏற்கனவே பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை காலி பணியிடங்களை நிரப்பும் அதிகாரம் எங்களிடம் இல்லை என்று மாவட்ட ஆட்சியின் கூறுகின்றனர் இந்த நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அல்லது அவரின் கீழ் பணி புரியும் அலுவலர்களோ விதிமுறைகளுக்கு புறம்பாக அனுமதி கட்டணம் தேர்வு கட்டணம் பள்ளி வளர்ச்சி நிதி மாற்றுச் சான்று பெற கட்டணம் என சட்டத்திற்கு புறம்பாக வசூலிப்பதை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்

மாவட்ட செய்தியாளர் காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad