பல்லடத்தில் முப்பதாயிரம் லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலர் கந்தசாமி கைது - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 11 June 2026

பல்லடத்தில் முப்பதாயிரம் லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலர் கந்தசாமி கைது


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கே அய்யம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் ஊ ஊராட்சி செயலர் பணியில் கந்தசாமி என்பவர் வேலை பார்த்து வருகிறார் இவரிடம் வரும் யாராக இருந்தாலும் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே இவருடைய வேலையை செய்து தருவார் இது ஒப்பந்ததாரர்களுக்கு மிகவும் வருத்தத்தில் இருந்தனர் இந்த சம்பவம் நடந்த அன்று கே. ஐயம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் பின் தொகை வழங்க ஒப்பந்ததாரர் கதிர்வேல் ஊராட்சி செயலர் கந்தசாமி அணுகியுள்ளார் இந்த நிலையில் அவர் முப்பதாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதால் இதனால் வருத்தம் அடைந்த ஒப்பந்ததாரர் கதிர்வேல் லஞ்ச ஒழிப்பு போலீசாரை தொடர்பு கொண்டு புகார் செய்துள்ளார் லஞ்ச ஒழிப்பு துறையினரும் ஊராட்சி செயலாளர் கந்தசாமியை கையும் களவுமாக பிடிப்பதற்கு  ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து கொடுத்து ஊராட்சி செயலர் கந்தசாமி இடம் பணம் கொடுக்க சொன்னார்கள் அதை பின்பற்றி ஒப்பந்ததாரர் கதிர்வேல் ஊராட்சி செயலர் கந்தசாமியை சந்தித்து 30 ஆயிரம் ரூபாயை வழங்கினார் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக ஊராட்சி செயலர் கந்தசாமியை பிடித்து கைது செய்தனர் இது தொடர்பாக கதிர்வேல் அடித்த புகாரியின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது லஞ்சம் லஞ்சம் என்று அலையும் இது போன்ற நபர்களால் தரமான சாலைகள் மற்ற பணிகள் தரம் இல்லாமல் செய்ய வேண்டிய சூழலில் ஒப்பந்ததாரர்கள் தள்ளப்படுகின்றனர் என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாகும் லஞ்சம் கொடுக்காமல் தரமான கட்டுமான பணிகளை மாநகராட்சி நகராட்சி ஊராட்சி  பகுதிகளில் பணிகளை தரமாக செய்ய முடியும் இதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad