திருப்பூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக அருண்ராஜ் நியமனம் தாராபுரம் முழுவதும் வாழ்த்து போஸ்டர்கள் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 4 June 2026

திருப்பூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக அருண்ராஜ் நியமனம் தாராபுரம் முழுவதும் வாழ்த்து போஸ்டர்கள்

தாராபுரம்: திருப்பூர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக மருத்துவம் மற்றும் மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அருண்ராஜ் நியமிக்கப்பட்டதை முன்னிட்டு தாராபுரம் நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பிரமாண்டமான முறையில் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த நியமனத்திற்கு வரவேற்பும், வாழ்த்தும் தெரிவிக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்க முன்னாள் நகரத் தலைவர் ஜாபர் சாதிக் தலைமையில் தாராபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார ஒன்றியப் பகுதிகள் முழுவதும் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

போஸ்டர்களில் அமைச்சர் அருண்ராஜ் அவர்களின் புதிய பொறுப்பு திருப்பூர் மாவட்ட வளர்ச்சிக்கும், மக்கள் நலத் திட்டங்கள் சிறப்பாக செயல்படவும் வழிவகுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தாராபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இயக்க நிர்வாகிகள் பலரும் அமைச்சர் அருண்ராஜ் அவர்களுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தாராபுரம் நகரின் முக்கிய சந்திப்புகள், பேருந்து நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த வாழ்த்து போஸ்டர்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad