திருப்பூரில் மாநகரில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மாநகர காவல் ஆணையர் தூக்கி வைத்தார் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 11 June 2026

திருப்பூரில் மாநகரில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மாநகர காவல் ஆணையர் தூக்கி வைத்தார்


தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களால் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த பெண்கள் பாதுகாப்பிற்கு சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார் அந்த வகையில் ஜூன் 9ஆம் தேதி மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை துவக்கி வைத்தார் அதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சு.ராஜேந்திரன்இ.கா.ப., அவர்கள் திருப்பூர் மாநகரில் பெண்களின் பாதுகாப்பு மேம்படுத்தும் வகையில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரை 10-6-2026 ஆம் தேதி முதல் திருப்பூர் மாநகர பகுதிகளில் செயல்படும் வகையில் காவல் ஆணையர் அவர்களால் மாநகர பகுதிகளில் ரோந்து பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டார்கள் 

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை குற்றங்களை தடுப்பது முதல் முன்னுரிமையாகும் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கும் நடவடிக்கைகள் இருக்கும் என்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை ஐஜி பவானீஸ்வரி கூறியுள்ளார் 

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை குற்றங்களை தடுப்பது முதல் முன்னுரிமை கொடுக்கும் அதன் பின்னர் நடவடிக்கை 100 - 112 - 1091 ஆகிய தொலைபேசி எண்கள் இப்போது சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படைக்காக செயல்பாட்டில் இருக்கின்றன மேலும் 49 ட்ரோன்கள் வாங்க எங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது விரைவில் அதை வாங்கி விடுவோம் அனைவருக்கும் பயிற்சி அளிப்போம் எங்கெல்லாம் போக முடியாத நிலை நிலவுகிறதோ குறிப்பாக இரவு நேரங்களில் அங்கெல்லாம் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் 

மப்ட்டியிலும் நாங்கள் கண்காணிப்போம் இவ்வாறு ஐஜி பவானீஸ்வரி கூறியுள்ளார்

மாவட்ட செய்தியாளர் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad