திருப்பூரில் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தீர்வு என்ன மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுக்குமா? - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 3 June 2026

திருப்பூரில் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தீர்வு என்ன மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுக்குமா?


திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சாக்கடைகள் தூர் வாரும்பொழுது பிளாஸ்டிக் பாட்டில்கள் ஒருமுறை உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர்கள் என பிளாஸ்டிக் பொருட்களால் நிறைந்துள்ளது இதனால் கழிவு நீர் அடைபட்டு ரோட்டில் வெளியேறும் சூழல் பல இடங்களில் உள்ளது இதனால் பொதுமக்களுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்படும் நிலை உள்ளது மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்  திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர் டாஸ்மார்க் பார் மற்றும் மளிகை கடைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட  பிளாஸ்டிக் கவர்கள் பிளாஸ்டிக் டம்ளர்கள் விற்பனை செய்கின்றனர் அதை உபயோகிக்கும் பொதுமக்கள் சாக்கடையில் வீசி விடுகின்றனர் பொதுமக்களுக்கும் பொறுப்பு வேண்டும் என்பதை உணர்வதில்லை மாநகராட்சியும் தீவிர நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்பவர்களை கண் துடைப்புக்காக ஒரு சிலரை மட்டும் பிடித்து அபராதம் விதிப்பதில் எந்த ஒரு பலனும் இல்லை அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக சோதனை செய்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பவர்களுக்கு அதிகபட்ச அளவில் அபராதம் விதிக்க வேண்டும் என்பதை சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது

மாவட்ட செய்தியாளர் அ. காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad