உடுமலை நகர மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் மு.மத்தீன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
டி மார்ட், அமேசான், இகியா, லூலு மால், டெஸ்கோ போன்ற கார்ப்ரேட்கள் உடுமலை நகரில் தங்களது வணிக நிறுவனங்களின் கிளைகளை அமைக்க உத்தேசித்து வருகின்றனர்.
தற்போது உள்ள பொருளாதார சூழலில் நம்மை போன்ற சிறிய நகரங்களில் இந்நிறுவனங்கள் வரும் பட்சத்தில் இங்குள்ள சிறு, குறு வியாபார பெருமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்படும்.
எனவே இதனை கருத்தில் கொண்டு 3 ஆண்டுகளுக்கு மேற்படி நிறுவனங்களின் கிளைகள் அமைப்பதற்கு நகர்மன்றம் ஆட்சே பனை தெரிவிப்பதுடன் நகராட்சி சார்பில் எவ்வித வரி விதிப்பும் செய்து கொடுக்க இயலாது இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
மாவட்ட செய்தியாளர் அ .காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment