திருப்பூரில் நெடுஞ்சாலை துறையில் தன்னார்வ நுகர்வோர் காலாண்டு கூட்டம் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 3 June 2026

திருப்பூரில் நெடுஞ்சாலை துறையில் தன்னார்வ நுகர்வோர் காலாண்டு கூட்டம்


திருப்பூரில் நெடுஞ்சாலைத்துறையில் தன்னார்வ நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடைபெற்றது

திருப்பூரில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

வளர்மதி பாலம் பணிகளை விரைவாக முடித்து முழு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்

போயம்பாளையத்தில் பேருந்து நிழல் குடை அமைக்க விரைவாக அனுமதி வழங்க வேண்டும் மேலும் பல கோரிக்கைகளை நுகர்வோர் சங்கத்தினர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் வைத்தனர்

திருப்பூா் மாவட்ட நெடுஞ்சாலை அலுவலர்கள் தன்னார்வ நுகர்வோர் அமைப்பினருடன் இணைந்து காலாண்டு கூட்டம் திருப்பூர் கல்லூரி சாலையிலுள்ள கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் கோட்ட பொறியாளர ச.ரத்தினசாமி, பி.இ. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் ஈ.பி.அ.சரவணன், நல்லூர் நுகர்வோர் மன்ற தலைவர் சண்முக சுந்தரம் , பனியன் சிட்டி கன்சூமர் வெல்பேர் அசோசியசன் தலைவர் கே.ஏ.கே.கிருஷ்ணசாமி, திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் சிந்து சுப்பிரமணிம்,   புதிய திருப்பூர் சமூக விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், தலைவர் ஜான்சாமுவேல், . தி. கன்ஸ்யூமர் கேர் அசோசியேசன், மற்றும் நெடுஞ்சாலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது..

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டத்திலுள்ள சர்கார் பெரிய பாளையம் அரசு உயர்நிலை பள்ளிக்கு முன்பாக வேகத்தடை அமைப்பதோடு சேர்த்து, வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்கும் வகையில் 'பள்ளி பகுதி - மெதுவாக செல்லவும் எச்சரிக்கை பலகைகளும் ஒளிரும் பட்டைகளும் அமைக்க வேண்டும்.

திருப்பூர் - ஊத்துக்குளி ரோடு ரூ.35 கோடி செலவில் மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய சாலைகளில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு நீண்ட நாட்கள் ஆவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க போதிய எச்சரிக்கை பலகை வைத்து நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

திருப்பூர் வடக்கு மாநகராட்சிக்குட்பட்ட பி.என் ரோடு புஷ்பா தியேட்டர் முதல் கணக்கம் பாளையம் பிரிவு வரை நெடுஞ்சாலையில் இருபுறமும் சாலையை ஆக்கிரமித்து தற்காலிக கடைகள் , வண்டிகடைகள், விளம்பர போர்டை நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறாக வைக்கப்பட்டுள்ளதால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் ஆக்ரமித்துள்ளதால் பொது மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றதால் உடனடியாக சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.திருப்பூர் பி.என் ரோடு போயம்பாளையம் பிரிவிலிருந்து கிழக்கு பொம்மநாயக்கன்பாளையம் செல்லும் சாலையில் இருபுறங்களிலும் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக முழுமையாக அகற்ற போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வுகாண வேண்டும். 

திருப்பூர் சுற்றுப்புற பகுதிகளிலுள்ள சேதமடைந்த சாலைகளை உடனடியாக முற்றிலுமாக சீரமைக்கவேண்டும்.

 திருப்பூரிலுள்ள  பி.என் ரோடு, அவிநாசி ரோடு, மங்கலம் ரோடு, பல்லடம் ரோடு, காங்கேயம் ரோடு, ஊத்துக்குளி ரோடு உள்ளிட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மாவட்ட செய்தியாளர்  அ காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad