திருப்பூர் அங்கேரிபாளையம் சர்வேஸ்வரா சமையல் சங்கம உணவகத்திற்கு காலை சிற்றுண்டி அருகில் அனுப்பர்பாளையம் காவல்நிலைய SSI முரளி அவர்கள் தலைமையில் சமூக சேவகர் அவேர்னஸ் அப்பா அவர்களும் தலைகவசம் பற்றிய விழிப்புணர்வு செய்தனர் மற்றும் அங்கேரிபாளையம் கொங்கு ஸ்கூல் அருகில் அனுப்பர்பாளையம் காவல் நிலைய அதிகாரி முரளி அவர்கள் நின்று தலை கவசமணியாமல் வந்த பெண்கள் முதியவர்கள் வேலைக்கு செல்பவர்கள் என சிலரை நிறுத்தி சில நிமிடங்கள் நில்லுங்க தலைக்கவசம் அணிவதின் அவசியம் குறித்து அவேர்னஸ் அப்பா விழிப்புணர்வாக
உங்களிடம் பேசுவார் என கூறினார் அவர்கள் மத்தியில் அவேர்னஸ் அப்பா தலைகவசம் அணிவதின் அவசியம் பற்றியும் தலைக்கவசம் அணித்தாலும் தலைக்கவசத்தின் லாக் போடனும் என்றும் ஒவ்வொருவரும் இழந்தால் திரும்பபெறமுடியாதது இரண்டு மட்டுமே ஒன்று இளமை மற்றொன்று உயிர் இருசக்கரவாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள் ஓட்டுனர் அணியவேண்டிய தலைகவசத்தை நீங்கள்கையில் வைத்திருப்பது கூடாது
இந்தியாவில் சாலைபயணத்தில் தலைக்கவசம் அணியாமல் பயணித்து விபத்து ஏற்பட்டு வருடத்திற்கு 30,ஆயிரம் பேர் இறக்கிறார்கள் என்ற ஒரு புள்ளிவிபரத்தை அவார்ட்னெஸ் அப்பா கூறினார்
அனுப்பர்பாளையம் காவல் நிலைய SSI முரளி அவர்கள் போலீஸ் உங்க நண்பர்கள் உங்கள் நலனில் எங்களுக்கும் அக்கரை உண்டு கவனமாகவும் பாதுகாப்புடனும் பயணியுங்கள் குறிப்பாக இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர் மட்டுமல்ல உடன் பயணிப்பவரும் தலைக்கவசம் அணிவது அவசியம் உங்க பாதுகாப்பும் இதில் உள்ளது என கூறி நிறைவு செய்தார். சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திருப்பூர் மாநகரத்தில் அந்தந்த சிக்னல்களில் கூடாரம் அமைத்து சேர்கள் வைத்து அதில் விதிமீறல்கள் செய்யும் வாகன ஓட்டிகளை அமர வைத்து அவர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வை திருப்பூர் போக்குவரத்து காவல்துறையினர் செய்வார்கள் தற்போது இதுபோன்று இடையிலும் ஆங்காங்கே ஹெல்மெட் போடாமல் வருபவர்களை மற்றும் சாலை விதிகளை கடைப்பிடிக்காத அவர்களை நிறுத்தி அறிவுரைகள் கூறினால் வாகன ஓட்டிகள் விழிப்புணர்வு அடைவார்கள் ஆனால் ஒரு சில இடங்களில் ஹெல்மெட்டைக்காக பிடித்து அவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர் போக்குவரத்து காவல்துறையினர் இது சரியான நடைமுறைதான் இருந்தாலும் அந்த போக்குவரத்து விழிப்புணர்வை வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல் வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment