அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பாரம்பரிய விதைகள் பரிமாற்ற கூட்டம் நடைபெற்றது - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 August 2026

அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பாரம்பரிய விதைகள் பரிமாற்ற கூட்டம் நடைபெற்றது



திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் தலைமைச் செயலகமாக கொண்டு செயல்பட்டு வரும் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் ஜிகே விவசாய மணி (எ) ஜி. சுப்பிரமணியம் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் வருட வருடம் கரையூர் அருகே உள்ள 

ஒலியமங்கலத்தில் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பாரம்பரிய விதைகள் பரிமாற்ற கூட்டம் நடைபெறுவது வழக்கம் இந்த வருடமும் பாரம்பரிய விதைகள் பரிமாற்ற கூட்டம் தலைவர் ஜி கே விவசாய மணி (எ) ஜி சுப்பிரமணியம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு மாநில இயற்கை வேளாண்மை பிரிவு தலைவர் முத்துசாமி தலைமை தாங்கி பேசினார் நஞ்சு இல்லா உணவையும் கொடுத்து இந்த மண்ணிற்கு தன்னால் இயன்ற  சேவைகளையும் தொடர்ந்து செய்வேன் என்று கூறினார் காவிரி குண்டாறு அமைப்பு தலைவர் நல்லையா வரவேற்புரை நிகழ்த்தினார் சங்கத்தின் நிறுவன தலைவர் ஜி கே விவசாய மணி (எ) ஜி சுப்பிரமணியம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார் மாநில சங்க பேச்சாளர் சந்திரசேகரன் உரையாற்றினார் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களுக்கு ஏற்ற விதை நெல்லை புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் பெற்று சென்றனர் முன்னதாக சங்கத் தலைவர் ஜிகே விவசாய மணி (எ) ஜி சுப்பிரமணியம் அவர்கள்

 ஒலியமங்கலம் சடையம்பட்டி ஆகிய இடங்களில் சங்க கொடிகளை ஏற்றி சிறப்புரையாற்றினார் இந்த நிகழ்வில் தஞ்சாவூர் புதுக்கோட்டை திருச்சி சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் இயற்கை ஆர்வலர்கள் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad