தாராபுரத்தில் அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைந்தனர் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 18 August 2026

தாராபுரத்தில் அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைந்தனர்

தாராபுரத்தில் அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைந்தனர்

மாவட்ட செயலாளர் சத்தியபாமா தலைமையில் கட்சியில் இணைப்பு

தாராபுரம், ஆக.18:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ந்து இணைந்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பூர் தென்கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி சத்தியபாமா அவர்களை கட்சித் தலைமை நியமித்துள்ளது. அவர் பொறுப்பேற்றது முதல் தாராபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரது தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, தாராபுரம் நகராட்சியின் 9 மற்றும் 10-வது வார்டுகளைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்டோர், மாவட்ட செயலாளர் சத்தியபாமா தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

புதிதாக இணைந்தவர்களை மாவட்ட செயலாளர் சத்தியபாமா வரவேற்று, கட்சியின் கொள்கைகள் மற்றும் மக்கள் பணிகளில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தாராபுரம் பகுதி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

திருப்பூர் மாவட்ட செய்தியாளர் S.ஜாபர்சாதிக் 

No comments:

Post a Comment

Post Top Ad