திருப்பூரில் பாலியஸ்டர் துணியினால் பனியன் தொழில் வளரந்துள்ளதோ இல்லையோ அதன் கழிவுகளால் திருப்பூர் வாழ்வதற்கு தகுதியில்லாத நகரமாக மோசமாக மாறிக்கொண்டு வருகின்றது என்பது மட்டும் வேதனையான உண்மைநகரத்தின் அனைத்து வீதியிலும் அனைத்து சாலைகளிலும் பாலியஸ்டர்கழிவு மூட்டைகளும் அவற்றை எரிப்பதால் ஏற்படும் கரும்புகையுமே நீக்கமற நிறைந்துள்ளன இதனால் இன்னும் சிறிது காலத்தில் திருப்பூர் மக்களுக்கு சுவாச நோய்களும் புற்று நோய்களும் ஏற்படுவது உறுதி இந்த மோசமான நிலைக்கு காரணம் பாலியஸ்டர் தயாரிப்பாளர்களின் நிர்பந்தமும் காட்டன் வேஸ்ட் குடோன் வைத்திருப்பவர்களின் சுயநலமுமே காட்டன் வேஸ்ட்டின் சிறு துண்டு கூட பணமாகும் ஆனால் பாலியஸ்டர் துணி எதற்கும் உதவாது காட்டன் வேஸ்ட்டை பிரித்து எடுத்து விற்றுவிட்டு பாலியஸ்டர் வேஸ்ட்டை மூட்டை கட்டி இரவு நேரங்களில் பல இடங்களில் வீசி விடுகின்றனர் சில புண்ணியவான்கள் மூட்டைகளை தீ வைத்து சென்று விடுகின்றனர் சில பாலியஸ்டர் தயாரிப்பாளர்களும் இரவில் இந்த வேலையை செய்கின்றனர்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் பிரிண்டிங் மற்றும் சாய ஆலைகளின் மீது மட்டுமே கவனம் செலுத்தி தவறு செய்கின்ற நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்ததால் பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது அனுமதி பெற்று விதிகளை மீறாமல் தொழில் செய்கின்றனர்.மாசுக்கட்டுப்பாட்டு விதிகளின் படி பனியன் தயாரிப்பு நிறுவனங்கள் பச்சைநிற பிரிவிலும் பனியன் வேஸ்ட் குடோன்களுக்கு எந்த அனுமதியும் தேவைப்படாததாலும் இவர்களின் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை ஊர் முழுவதும் மூட்டை முட்டையாக பாலியஸ்டர் கழிவுகள் கிடப்பதும் அவற்றை தீ வைப்பதால் காற்று மாசுபாடு ஏற்படுவது தெரிந்தும் அவற்றை கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகள் எதுவும் எடுத்தது போல தெரியவில்லை இந்த நிலை தொடர்ந்தால் சுத்திகரிப்பு செய்யாத சாய ஆலைகளால் முன்பு நொய்யல் ஆறும் நிலத்தடி நீரும் சீர்கெட்டது போலவே திருப்பூர் மண்ணும் காற்றும் மிக மோசமாகும் மாற்றுவழி பாலியஸ்டர் கழிவுகளை மறுசுழற்சி செய்யமுடியாது ஆனால் பாதுகாப்பான முறையில் சிமெண்ட் ஆலைகளுக்கு எரிபொருளாக மாற்றி அழிக்கலாம்..அந்த தொழிலை பெருமாநல்லூர் கணக்கம்பாளையம் பொங்குபாளையத்தில் செயல்படும்
“ Regain Reprocess” நிறுவனம் கடந்த எட்டு ஆண்டுகளாக பல்வேறு வகையான நஞ்சில்லா உலர்கழிவுகளை சரியான முறையில் மறுபயன்பாடு செய்து கொண்டிருக்கிறது இந்த நிறுவனத்தில் மறுசுழற்சி செய்யமுடியாத எம்ப்ராய்டரி ஃபோம் லைக்ரா பாலியஸ்டர் சிந்தடிக் எலாஸ்டிக் பிரிண்டிங் ஃபாயில் பேப்பர் மற்றும் பேலட் பேப்பர் மக்காத தெர்மோகோல் மற்றும் மாநகராட்சி சேகரித்து மறுசுழற்சி செய்ய முடியாத அனைத்துவிதமான உலர் கழிவுகளையும் மிகச்சிறப்பாக அரைத்து பேல் செய்து சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர் சிமெண்ட் ஆலைகள் 1300 டிகிரி சென்டிகிரேடிற்கும் அதிகமான வெப்பநிலையில் செயல்படுவதால் இந்த கழிவுகளை எரிப்பதால் எந்தவிதமான வாயுக்களும் வெளியாவதில்லை 300 அடி உயரமான புகைபோக்கியில் வெளியேறும் புகையானது நீர் தெளிப்பானுக்குள் சென்று மேலே செல்வதால் கார்பன் அனைத்தும் கீழேயே தங்கிவிடுகிறது இந்த கழிவுகளை மறு பயன்பாடு செய்வதற்காக கிலோவிற்கு ₹2/-மட்டுமே கட்டணமாக வாங்குகின்றனர் நமது வாகனத்திலேயே கொடுக்கலாம் அவர்கள் எடுத்தால் சற்று கூடுதலாகும்
இந்த நிறுவனத்தின் கொள்திறன் நாள் ஒன்றுக்கு 70-90 டன்கள் ஆனால் இங்கு வரும் உலர் கழிவுகள் 20-25 டன்கள் மட்டுமே மாநகராட்சியில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளின் அளவு 500-550 டன்கள் அதில் மக்கும் குப்பைகளை தரம்பிரித்தபின் சிறிதளவு மக்காத குப்பைகள் இங்கு வருகின்றன அதுவும் தரம் பிரித்த குப்பைகள் மறுசுழற்சிக்கு உடனடியாக அனுப்புவதில்லை மிகவும் தாமதப்படுத்துவதால் அனைத்து வார்டுகளிலும் மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப்பட்டுள்ளது ஏன் இவ்வாறு வைக்கப்பட்டுள்ளது என்று சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் கேட்டால் முறையாக வந்து எடுப்பதில்லை அதனால் வீதிகளில் போட்டு வைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது என்று கூறுகின்றனர் மேலும் குப்பை தரம் பிரிப்பதற்கு ரோடுகளிலேயே பயன்படுத்துகின்றனர் அங்கேயே தூய்மை பணியாளர்கள் குப்பைகளை கிளறி மக்கும் குப்பை மக்காத குப்பை எடுத்து கொண்டுள்ளனர் மக்கும் குப்பை மக்காத குப்பை எடுப்பதற்கு கட்டிய குடோன்கள் என்ன உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது இல்லை அது பூட்டி வைக்கப்பட்டுள்ளதா என்று சமூக ஆர்வலர்கள் வேதனையோடு கேட்கின்றார்கள்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment