திருப்பூர் பள்ளிவாசல் உள்ளே அத்து மீறிய இந்து முன்னனியினர் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க கோரிக்கை - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 23 August 2026

திருப்பூர் பள்ளிவாசல் உள்ளே அத்து மீறிய இந்து முன்னனியினர் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க கோரிக்கை



திருப்பூர் கோல்டன் நகர் பள்ளிவாசலில் தொழுகை நடக்கும் பொழுது இடையூறு செய்த இந்து  முன்னணியினரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு இஸ்லாமியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இது பற்றி கூறியதாவது திருப்பூர் கோல்டன் நகரில் ஆகஸ்ட் 21 ம் தேதி வெள்ளிக்கிழமை   பள்ளிவாசலில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி கொண்டு இருக்கும் போது அங்கு வந்த இந்து முன்னணியினர் பள்ளிவாசல் முற்றுகை என்ற பெயரில் அத்து மீறல்கள் செய்து உள்ளே நுழைய முயற்சி செய்து உள்ளனர். இதனால் தொழுகைக்கு மிகவும் இடையூறு ஏற்பட்டது

தமிழ் நாட்டில் இது வரை இப்படி பள்ளிவாசல் முன்பு எந்த விதத்திலும் போராட்டம் நடத்த எந்த அரசும் அனுமதித்தது இல்லை பள்ளிவாசல் உள்ளே செல்லும் வரை காவல் துறையினர் அஜாக்கிரதையாக இருந்தது ஏன் என்றும்

பள்ளிவாசல் முன்பு மீறியவர்களை காவல் துறை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இஸ்லாமிய பெருமக்கள் தெரிவித்தனர்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad