தமிழ்நாடு காவல்துறை (சட்டம் ) டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அவர்கள் பிறப்பித்த புதிய உத்தரவின் படி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காவல் நிலையங்களில் வாரத்திற்கு இரண்டு நாள் பொதுமக்கள் குறைதீர் முகாம் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார் இதன்படி அனைத்து காவல் நிலையங்களிலும் வாரத்தில் இரண்டு நாள் அதாவது புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை காலை 11:00 மணி முதல் ஒரு மணி வரை பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்று வருகிறது அந்த வகையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் திருமதி சி. ராஜேஸ்வரி அவர்கள் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது இந்தக் முகாமில் பொதுமக்களை நாற்காலியில் அமர வைத்து பொறுமையாக அவர்களுடைய பிரச்சினையை கேட்டறிந்து பொதுமக்களிடமிருந்து புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் சி ராஜேஸ்வரி அவர்கள் உத்தரவிட்டார் இந்த முகாமில் கலந்து கொண்டு புகார் மனுவை கொடுத்து வந்த பொதுமக்கள் கூறியதாவது இந்த முகாம் பயனுள்ளதாக இருப்பதாகவும் காவல்துறையினர் தங்களை நாற்காலியில் அமர வைத்து பொறுமையாக புகார்களை கேட்டறிந்து அதை மனுவாக பெற்று உடனடியாக முடிக்க வேண்டிய புகார்களை முடித்துக் கொடுத்தும் கால அவகாசம் தேவைப்படும் புகார்களுக்கு கால அவகாசம் கேட்டும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கின்றனர் இது மனதுக்கு நிறைவாக உள்ளது தமிழ்நாடு அரசுக்கும் தமிழக காவல்துறைக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறினர்
மாவட்ட செய்தியாளர் அ. காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment